பாரிஸ் ஒலிம்பிக்ஸ் pt web
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: எந்தெந்த நாடுகள் எவ்வளவு பதக்கம்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

PT WEB

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் இரண்டாம்நாள் நிலவரப்படி, பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருக்கிறது. 3 தங்கம், 2 வெள்ளி என ஐந்து பதக்கங்களை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 தங்கம், ஒரு வெண்கல பதக்கத்தை வென்று சீனா இரண்டாம் இடத்திலும், 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 5 பதக்கங்ளுடன் கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதேபோல், ஒரு தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலத்தை தன்வசப்படுத்திய அமெரிக்கா நான்காம் இடத்தில் இருக்கிறது. ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 17-ஆவது இடத்தை பிடித்துள்ளது.