மனு பாக்கர் pt web
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்: ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கை அளித்துள்ளார்.

PT WEB

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பாக களமிறங்கிய மனு பாக்கர், 580 புள்ளிகளை பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஹங்கேரி வீராங்கனை வெரோனிகா மேஜர், 582 புள்ளிகளையும், தென்கொரிய வீராங்கனை Y.J.OH 582 புள்ளிகளையும் பெற்றனர். இப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ரிதம் Sangwan 15 ஆவது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தார்.

துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் இரு அணிகளும் தகுதிச்சுற்றிலேயே தோல்வியடைந்தன. ரமிதா, அர்ஜுன் பபுதா இணை 628. 7 புள்ளிகளை மட்டுமே எடுத்து 6ஆம் இடத்தை பிடித்தது. இந்த இணை பதக்க சுற்று வாய்ப்பை ஒரே ஒரு புள்ளியில் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கலப்பு இரட்டையர் போட்டியில் இளவேனில் வாலறிவன், சந்தீப் சிங் இணை 626.3 புள்ளிகளை மட்டுமே எடுத்து தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. படகு வலித்தல் ஸ்கல் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் தனது பிரிவில் 4ஆவதாக வந்தார்.

எனினும் தோல்வியுற்றவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் "ரெபசேஜ்" பிரிவில் பால்ராஜ் பன்வர் உள்ள நிலையில் அவருக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.