ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை தட்டிச்செல்லும் சில வீரர்கள், நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.
அந்தவகையில் உலகின் அதிவேக வீரராக உருவெடுத்துள்ள நோவா லைல்ஸின் வார்த்தைகள், எவர் ஒருவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று ஒட்டுமொத்த உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பியுள்ளார் அமெரிக்காவின் நோவா லைல்ஸ். பந்தயத்தின் பாதி நேரம் வரை 7வது இடத்தில் இருந்த லைல்ஸ், அடுத்த பாதியில் மின்னல் வேகத்தில் முன்னேறி முதலிடத்தை எட்டினார்.
உலகின் அதிவேக மனிதனாக மகுடம் சூடிய பிறகு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஆஸ்துமா, அலர்ஜி, மன அழுத்தம், பதற்றம், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த இயலாமை என பல்வேறு பிரச்னைகள் தனக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
"இவ்வளவு துன்பங்கள் நேர்ந்தபோதும், தன்னால் உலகின் அதிவேக வீரராக மாற முடிந்தது என்றால் உங்களால் ஏன் முடியாது" என நோவா லைல்ஸ் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளை உதித்துள்ளார்.