பாரிஸ் ஒலிம்பிக்ஸ் முகநூல்
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கடைசி நாள்| கடைசி கட்டத்திலும் இந்தியாவுக்கு அடுத்தடுத்த ஏமாற்றம்!

PT WEB

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் நடந்த போட்டிகளில் இந்தியா ஏமாற்றத்தை சந்தித்தது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் நேற்றைய கடைசிநாளில் மகளிர் கோல்ஃப் இறுதிச்சுற்றில் பங்கேற்ற அதீதி அசோக் மற்றும் தீக்ஷா தாகர் ஆகியோர் புள்ளிப்பட்டியலில் முறையாக 29 மற்றும் 49 ஆவது இடங்களை பிடித்தனர். இதனால் இருவரும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.

அதேசமயம், மகளிர் மல்யுத்தத்தில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஹங்கேரி வீராங்கனை பெர்னாடேட் நாகியை வீழ்த்தி இந்தியாவின் ரீதிகா ஹூடா காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் கிர்கிஸ்தான் வீராங்கனை அலிபெரி மெட்டெட் உடன் மோதிய ரீதிகா ஹூடா ஆட்டத்தை சமன் செய்தார். எனினும் புள்ளிகளின் அடிப்படையில் அவர் அடுத்த சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வெளியேறினார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்த நிலையில், இந்தியா 6 பதக்கங்களுடன் பட்டியலில் 70ஆவது இடத்தில் உள்ளது.