மனு பாக்கர், சரப்ஜோத் pt web
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியாவிக்கு இரண்டாவது பதக்கம்; வரலாற்றுச் சாதனை படைத்த மனு பாக்கர்!

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை வெண்கல பதக்கம் வென்றது.

Angeshwar G

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரின் மூன்றாவது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியின் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது இதில் இந்தியாவிற்காக பாரிஸ் ஒலிமபிக்ஸ் தொடரில் முதல் பதக்கத்தை வென்ற மனு பாக்கர்/ அர்ஜூன் சரப்ஜோத் இணை 580 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தனர் இதன் மூலம் வெண்கல பதகத்திற்கான சுற்றுக்கு முன்னேறினர்.

தகுதிச் சுற்றில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்திருந்த அணிகள் தங்கம் வெல்வதற்கான தீவிரத்தில் இருந்த நிலையில், மூன்றாம் இடம் பிடித்த இந்திய வீரர்கள் வெண்கலம் வெல்வதற்கு தீவிரமாக முயற்சித்து வந்தனர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸின் 4 ஆவது நாளில் இந்திய இணை தென் கொரியாவிற்கு எதிராக களமிறங்கியது. இதில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் 16-10 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றனர்.

ஆறாவது வீரர் சரப்ஜோத்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் ஒரே ஒலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனையாக மனுபாக்கர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்த மனுபாக்கர், துப்பாக்கிச் சுடுதலில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களைப் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி மற்றொரு வீரரான சரப்ஜோத் ஒலிம்பிக்ஸில் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளார். சரப்ஜோத் ஒலிம்பிக்ஸில், துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற ஆறாவது இந்திய வீரராவார்.

இதுவரை வென்ற பதக்கங்கள் என்ன? 

முன்னதாக, 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் துப்பாக்கிச் சுடுதலில் முதல்முறையாக சில்வர் பதக்கம் வென்றிருந்தார். இவர் ஆண்கள் டபுள் ட்ராப் பிரிவில் சில்வர் பதக்கம் வென்றிருந்தார். அடுத்து 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

manu bhakar

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ககன் நரங் ஆண்கள் 10மீ ஏர் ரைபிள் வெண்கலப்பதக்கமும், அதே ஆண்டில் வினய் குமார் ஆண்கள் 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டலில் வெள்ளிப்பதக்கமும் வென்றிருந்தனர். அதன்பின் நடப்பாண்டில் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப்பதக்கமும், 10 மீ கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இருவரும் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்.