ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் pt
ஒலிம்பிக்ஸ்

INDIA at 2024 Olympics: 16 நாட்கள், 16 விளையாட்டுகள், 69 பதக்கங்கள், 112 வீரர்கள்! போட்டி முழுவிவரம்

Rishan Vengai

2024 பாரிஸ் 2024 ஒலிம்பிக் அட்டவணையில் இந்தியா ஜூலை 25-ம் தேதிமுதல் பதக்கங்களுக்கான வேட்டையை தொடங்குகிறது. அடுத்த 16 நாட்களில், இந்தியாவைச் சேர்ந்த 112 விளையாட்டு வீரர்கள் 16 விளையாட்டுகளில் 69 பதக்கப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

போட்டிகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்..

1. தடகளம் (ஆகஸ்டு 1 - ஆகஸ்டு 10)

இந்தியாவை பொறுத்தவரையில் 29 பேர் கொண்ட தடகளக் குழு, பாரீஸ் 2024-ல் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ளது. நீரஜ் சோப்ரா மற்றும் கோ 16 வெவ்வேறு பதக்கப் போட்டிகளில் விளையாடவிருக்கின்றனர்.

போட்டிகள்:

ஆகஸ்டு 1 - ஆண்களுக்கான 20 கிமீ பந்தய நடை, பெண்களுக்கான 20 கிமீ பந்தய நடை

ஆகஸ்டு 2 - பெண்களுக்கான 5000மீ முதல் சுற்று, ஆண்களுக்கான குண்டு எறிதல் தகுதிசுற்று

ஆகஸ்டு 3 - ஆண்களுக்கான குண்டு எறிதல் பைனல்

ஆகஸ்டு 4 - பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் முதல் சுற்று, ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிசுற்று

ஆகஸ்டு 5 - ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் முதல் சுற்று, பெண்களுக்கான 400மீ முதல் சுற்று

2024 olympics

ஆகஸ்டு 6 - பெண்களுக்கான 5000 மீ பைனல், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி A, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி B, மகளிருக்கான 400மீ ரெபிசேஜ், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனல்

ஆகஸ்டு 7 - பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் பைனல், மாரத்தான் ரேஸ் வாக் ரிலே கலப்பு, ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிசுற்று, பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் முதல் சுற்று, பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி A, பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி B,ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் தகுதிசுற்று

ஆகஸ்டு 8 - பெண்களுக்கான 400 மீ அரையிறுதி, ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் பைனல், பெண்களுக்கான குண்டு எறிதல் தகுதிசுற்று, பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனல்

Neeraj Chopra

ஆகஸ்டு 9 - பெண்களுக்கான 4x400மீ தொடர் ஓட்டம், ஆண்களுக்கான 4x400மீ தொடர் ஓட்டம், பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் அரையிறுதி, ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பைனல், பெண்களுக்கான குண்டு எறிதல் பைனல், பெண்களுக்கான 400மீ பைனல்

ஆகஸ்டு 10 - ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனல், பெண்களுக்கான ஈட்டி எறிதல் பைனல், பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம்

ஆகஸ்டு 11 - ஆண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டம் பைனல், பெண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டம் பைனல்

2. துப்பாக்கி சுடுதல் (ஜூலை 27 முதல் ஆகஸ்டு 5)

துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பங்களிப்பாக 21 வீரர்கள் பங்கேற்று விளையாடவிருக்கின்றனர்.

போட்டிகள்:

ஜூலை 27 - கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிசுற்று, ஆண் மற்றும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று

ஜூலை 28 - ஆண் மற்றும் பெண் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிசுற்று, ஆண் மற்றும் பெண் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பைனல்

ஜூலை 29 - கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிசுற்று, ஆண் மற்றும் பெண் 10 மீட்டர் ஏர் ரைபிள் பைனல், ஆண்களுக்கான ட்ராப் தகுதிசுற்று

துப்பாக்கி சுடுதல்

ஜூலை 30 - கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பைனல், ஆண் மற்றும் பெண் ட்ராப் தகுதிசுற்று, ஆண் ட்ராப் பைனல்

ஜூலை 31 - பெண் ட்ராப் தகுதிசுற்று, ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் தகுதிசுற்று

ஆகஸ்டு 1 - ஆண் 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பைனல், பெண் 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் தகுதிச்சுற்று

ஆகஸ்டு 2 - பெண் 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பைனல், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிசுற்று, ஆண்களுக்கான ஸ்கீட் தகுதிச்சுற்று 1

துப்பாக்கி சுடுதல்

ஆகஸ்டு 3 - பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பைனல், ஆண்களுக்கான ஸ்கீட் தகுதிச்சுற்று 2, பெண்களுக்கான ஸ்கீட் தகுதிச்சுற்று 1, ஆண்களுக்கான ஸ்கீட் பைனல்

ஆகஸ்டு 4 - பெண்களுக்கான ஸ்கீட் தகுதிச்சுற்று 2, பெண்களுக்கான ஸ்கீட் பைனல், ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் தகுதிசுற்று 1

ஆகஸ்டு 5 - ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பைனல், கலப்பு அணி ஸ்கீட் தகுதிச்சுற்று, கலப்பு அணி ஸ்கீட் பைனல்

3. பேட்மிண்டன் (ஜூலை 27 - ஆகஸ்டு 5)

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெறவிருக்கும் பேட்மிண்டன் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து காணப்படுவார்.

போட்டிகள்:

ஜூலை 27 - ஜூலை 30 - ஆண் மற்றும் பெண் சிங்கிள் குரூப் ஸ்டேஜ், ஆண் மற்றும் பெண் இரட்டையர் குரூப் ஸ்டேஜ்

ஜூலை 31 - ஆண் மற்றும் பெண் சிங்கிள் குரூப் ஸ்டேஜ்

ஆகஸ்டு 1, ஆண் மற்றும் பெண் இரட்டையர் குரூப் ஸ்டேஜ் காலிறுதி சுற்று, ஆண் மற்றும் பெண் சிங்கிள் 16 சுற்று

பிவி சிந்து

ஆகஸ்டு 2 - பெண் இரட்டையர் அரையிறுதி, ஆண் சிங்கிள் காலிறுதி

ஆகஸ்டு 3 - பெண் சிங்கிள் காலிறுதி, பெண் இரட்டையர் பைனல்

ஆகஸ்டு 4 - ஆண் மற்றும் பெண் சிங்கிள் அரையிறுதி, ஆண் இரட்டையர் பைனல்

ஆகஸ்டு 5 - ஆண் மற்றும் பெண் சிங்கிள் பைனல்

4. குத்துச்சண்டை ( ஜூலை 27 - ஆகஸ்டு 10)

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடக்கவிருக்கும் குத்துச்சண்டை போட்டிகளில், டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன் மற்றும் இரண்டு முறை உலக சாம்பியனான நிகாத் ஜரீனும் பங்கேற்கின்றனர்.

பங்கேற்கவிருக்கும் இந்திய வீரர்கள் : ஆண் - அமித் பங்கல் (51 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ), பெண் - நிகத் ஜரீன் (50 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ)

ஜூலை 28 - நிகத் ஜரீன் தொடங்குகிறார், ஜூலை 31 - லோவ்லினா போர்கோஹைன் விளையாடுகிறார்

போட்டிகள்:

ஜூலை 27 - பெண்களுக்கான 54 கிலோ 32 சுற்று

ஜூலை 28 - பெண்களுக்கான 54 கிலோ 32 சுற்று, ஆண் 71 கிலோ 32 சுற்று

ஜூலை 30 - ஆண்களுக்கான 51 கிலோ 16 சுற்று, பெண்களுக்கான 54 கிலோ 16 சுற்று, பெண்களுக்கான 57 கிலோ 32 சுற்று

ஜூலை 31 - ஆண்களுக்கான 71 கிலோ 16 சுற்று, பெண்களுக்கான 75 கிலோ ஆரம்ப சுற்று

amit panghal

ஆகஸ்டு 1 - பெண்களுக்கான 50 கிலோ சுற்று, பெண்களுக்கான 54 கிலோ காலிறுதி

ஆகஸ்டு 2 - பெண்களுக்கான 57 கிலோ சுற்று, ஆண்களுக்கான 51 கிலோ காலிறுதி

ஆகஸ்டு 3 - ஆண்களுக்கான 71 கிலோ காலிறுதி, பெண்களுக்கான 50 கிலோ காலிறுதி

ஆகஸ்டு 4 - பெண்களுக்கான 57 கிலோ காலிறுதி, பெண்களுக்கான 75 கிலோ காலிறுதி, பெண்களுக்கான 54 கிலோ அரையிறுதி, ஆண்களுக்கான 51 கிலோ அரையிறுதி

Nikhat Zareen

ஆகஸ்டு 7 - ஆண்களுக்கான 71 கிலோ அரையிறுதி, பெண்களுக்கான 50 கிலோ அரையிறுதி

ஆகஸ்டு 8 - பெண்களுக்கான 57 கிலோ அரையிறுதி

ஆகஸ்டு 9 - ஆண்களுக்கான 51 கிலோ பைனல், பெண்களுக்கான 54 கிலோ பைனல்

ஆகஸ்டு 10 - ஆண்களுக்கான 71 கிலோ இறுதிப் போட்டி, பெண்களுக்கான 50 கிலோ இறுதிப் போட்டி

ஆகஸ்டு 11 - பெண்களுக்கான 57 கிலோ பைனல், பெண்களுக்கான 75 கிலோ பைனல்

5. வில்வித்தை (ஜூலை 25 - ஆகஸ்டு 4)

தீபிகா குமாரி மற்றும் தருண்தீப் ராய் உள்ளிட்ட வில்லாளர்கள் ஜூலை 25-ம் தேதி தரவரிசை சுற்றோடு தொடங்குகின்றனர்.

போட்டிகள்:

ஜூலை 25 - ஆண் மற்றும் பெண்களுக்கான தகுதிச்சுற்று

ஜூலை 28 - பெண்கள் அணி 1/8 எலிமினேஷன் சுற்று

ஜூலை 29 - ஆண்கள் அணி 1/8 எலிமினேஷன் சுற்று

Deepika Kumari

ஜூலை 30 - ஜூலை 31 : ஆண் மற்றும் பெண் 1/32, 1/16 எலிமினேஷன் சுற்று

ஆகஸ்டு 2 - கலப்பு அணி மோதல்

ஆகஸ்டு 3 - பெண்கள் அணி 1/8 எலிமினேஷன் சுற்று

ஆகஸ்டு 4 - ஆண்கள் அணி 1/8 எலிமினேஷன் சுற்று

6. ஹாக்கி (ஜூலை 27 முதல் ஆகஸ்டு 8)

இந்திய ஹாக்கி ஜூலை 27 அன்று நியூசிலாந்துக்கு எதிராக தங்களது முதல் போட்டியை துவங்குகிறது.

போட்டிகள்:

indian hockey team

ஜூலை 27 vs நியூசிலாந்து

ஜூலை 29 vs அர்ஜெண்டினா

ஜூலை 30 vs அயர்லாந்து

ஆகஸ்டு 1 vs பெல்ஜியம்

ஆகஸ்டு 2 vs ஆஸ்திரேலியா

7. டேபிள் டென்னிஸ் (ஜூலை 27 - ஆகஸ்டு 10)

இந்தியாவை பொறுத்தவரையில் 6 வீரர்கள் மற்றும் 2 ரிசர்வ் வீரர்கள் என மொத்தம் 8 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஆண் - ஏ. ஷரத் கமல், ஹர்மீத் தேசாய், மானவ் தக்கர், மாற்று வீரர்: ஜி.சத்தியன்.

பெண் - மாணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத், மாற்று வீரர்: அய்ஹிகா முகர்ஜி

போட்டிகள்:

Manika Batra - Sharath Kamal Achanta

ஜூலை 27 - ஆண்கள் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று, பெண்கள் ஒற்றையர் தொடக்க சுற்று, ஆண்கள் சிங்கிள்ஸ் சுற்று 64, பெண்கள் சிங்கிள்ஸ் சுற்று 64

ஜூலை 28 - ஆண்கள் சிங்கிள்ஸ் சுற்று 64, பெண்கள் சிங்கிள்ஸ் சுற்று 64

ஜூலை 29 - ஆண்கள் சிங்கிள்ஸ் சுற்று 64, பெண்கள் சிங்கிள்ஸ் சுற்று 64, ஆண்கள் சிங்கிள்ஸ் சுற்று 32, பெண்கள் சிங்கிள்ஸ் சுற்று 32

ஜூலை 30 - ஆண்கள் சிங்கிள்ஸ் சுற்று 32, பெண்கள் சிங்கிள்ஸ் சுற்று 32

ஜூலை 31 - ஆண்கள் சிங்கிள்ஸ் சுற்று 32, பெண்கள் சிங்கிள்ஸ் சுற்று 32, ஆண்கள் சிங்கிள்ஸ் சுற்று 16, பெண்கள் சிங்கிள்ஸ் சுற்று 16

ஆகஸ்டு 1 - ஆண்கள் சிங்கிள்ஸ் காலிறுதி, பெண்கள் சிங்கிள்ஸ் காலிறுதி

ஆகஸ்டு 2 - ஆண்கள் சிங்கிள்ஸ் அரையிறுதி, பெண்கள் சிங்கிள்ஸ் அரையிறுதி

ஆகஸ்டு 3 - பெண்கள் சிங்கிள்ஸ் பைனல், பெண்கள் சிங்கிள்ஸ் வெண்கலம்

ஆகஸ்டு 4 - ஆண்கள் சிங்கிள்ஸ் பைனல், ஆண்கள் சிங்கிள்ஸ் வெண்கலம்

Manika Batra

ஆகஸ்டு 5 - ஆண்கள் அணி சுற்று 16, பெண்கள் அணி சுற்று 16

ஆகஸ்டு 6 - ஆண்கள் அணி சுற்று 16, பெண்கள் அணி சுற்று 16, ஆண்கள் அணி காலிறுதி, பெண்கள் அணி காலிறுதி

ஆகஸ்டு 7 - ஆண்கள் அணி காலிறுதி, பெண்கள் அணி காலிறுதி, ஆண்கள் அணி அரையிறுதி

ஆகஸ்டு 8 - ஆண்கள் அணி அரையிறுதி, பெண்கள் அணி அரையிறுதி

ஆகஸ்டு 9 - ஆண்கள் அணி பைனல், ஆண்கள் அணி வெண்கலம்

ஆகஸ்டு 10 - பெண்கள் அணி பைனல், பெண்கள் அணி வெண்கலம்

8. டென்னிஸ் (ஜூலை 27 - ஆகஸ்டு 4)

1996-க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் முதல் பதக்கத்தை கொண்டுவரும் முனைப்பில் சுமித் நகல் பங்கேற்கவுள்ளார். இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி பங்கேற்கவுள்ளனர்.

போட்டிகள்:

சுமித் நகல்

ஜூலை 27 - ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று, ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று

ஜூலை 28 - ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று, ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று

ஜூலை 29 - ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று, ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று

ஜூலை 30 - ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று, ஆண்கள் இரட்டையர் காலிறுதி

ரோகன் போபண்ணா

ஜூலை 31 - ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று, ஆண்கள் இரட்டையர் அரையிறுதி

ஆகஸ்டு 1 - ஆண்கள் ஒற்றையர் காலிறுதி

ஆகஸ்டு 2 - ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி, ஆண்கள் இரட்டையர் வெண்கலம்

ஆகஸ்டு 3 - ஆண்கள் ஒற்றையர் வெண்கலம், ஆண்கள் இரட்டையர் பைனல்

ஆகஸ்டு 4 - ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனல்

9. பளு தூக்குதல் (ஆகஸ்டு 7)

டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, பெண்கள் 49 கிலோ எடை தூக்கும் போட்டியில் ஆகஸ்ட் 7-ம் தேதி பங்கேற்கிறார்.

Mirabai Chanu

ஆகஸ்டு 7 - பெண்களுக்கான 49 கிலோ இறுதிப் போட்டி

10. கோல்ஃப் (ஆகஸ்டு 1 - ஆகஸ்டு 10)

சுபங்கர் ஷர்மா மற்றும் ககன்ஜீத் புல்லர் 2 ஆண்கள், அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் 2 பெண்கள் உட்பட 4 பேர் பங்கேற்கின்றனர்.

போட்டிகள்:

Aditi Ashok, Diksha Dagar

ஆகஸ்டு 1 - ஆண்கள் கோல்ஃப் முதல் சுற்று

ஆகஸ்டு 2 - ஆண்கள் கோல்ஃப் இரண்டாவது சுற்று

ஆகஸ்டு 3 - ஆண்கள் கோல்ஃப் மூன்றாவது சுற்று

ஆகஸ்டு 4 - ஆண்கள் கோல்ஃப் நான்காவது சுற்று

ஆகஸ்டு 7 - பெண்கள் கோல்ஃப் முதல் சுற்று

ஆகஸ்டு 8 - பெண்கள் கோல்ஃப் இரண்டாவது சுற்று

ஆகஸ்டு 9 - பெண்கள் கோல்ஃப் மூன்றாவது சுற்று

ஆகஸ்டு 10 - பெண்கள் கோல்ஃப் நான்காவது சுற்று

11. மல்யுத்தம் (ஆகஸ்டு 5 - ஆகஸ்டு 11)

வினேஷ் போகத் (50 கிலோ), ஆன்டிம் பங்கால் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), நிஷா தஹியா (68 கிலோ), ரீத்திகா ஹூடா (76 கிலோ), அமன் செஹ்ராவத் (57 கிலோ) முதலிய 6 மல்யுத்த வீரர்கள் மீது இந்தியா பதக்க நம்பிக்கையை வைத்துள்ளது.

போட்டிகள்:

Anshu Malik

ஆகஸ்டு 5 - பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​68 கிலோ, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​68 கிலோ காலிறுதி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​68 கிலோ அரையிறுதி

ஆகஸ்டு 6 - பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​68 கிலோ ரெபிசேஜ், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​50 கிலோ சுற்று 16, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​50 கிலோ காலிறுதி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​50 கிலோ அரையிறுதி

ஆகஸ்டு 7 - பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​68 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​68 கிலோ இறுதிப் போட்டி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​50கிலோ ரெபிசேஜ், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ சுற்று 16, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ காலிறுதி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ அரையிறுதி

vinesh phogat

ஆகஸ்டு 8 - பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​50 கிலோ வெண்கலப் பதக்க போட்டி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​50 கிலோ இறுதிப் போட்டி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ ரெபிசேஜ், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ சுற்று 16, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ காலிறுதி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ அரையிறுதி.

ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ சுற்று 16, ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ காலிறுதி,

ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ அரையிறுதி

ஆகஸ்டு 9 - பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ வெண்கலப் பதக்கம், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ இறுதிப் போட்டி

Antim Panghal

ஆகஸ்டு 10 - பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ இறுதிப் போட்டி

ஆகஸ்டு 11 - பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​76கிலோ ரெபிசேஜ், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​76 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டி, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​76 கிலோ இறுதிப் போட்டி

12. குதிரையேற்றம் (ஜூலை 30 - ஆகஸ்டு 4)

இந்தியா தரப்பில் முதல்முறையாக அன்ஷு அகர்வல்லா பங்கேற்கவுள்ளார்.

Anush Agarwalla

போட்டிகள்:

ஜூலை 30 - தனிநபர் டிரஸ்ஸேஜ் நாள் 1

ஜூலை 31 - தனிநபர் டிரஸ்ஸேஜ் நாள் 2

ஆகஸ்டு 4 - தனிநபர் டிரஸ்ஸேஜ் பைனல்

13. படகோட்டம் (Sailing) (ஆகஸ்டு 1 - ஆகஸ்டு 6)

வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்த விஷ்ணு சரவணன், நேத்ரா குமணன் முதலிய தமிழக வீரர்கள் இந்தியாவிற்காக பதக்கத்தை கொண்டுவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vishnu Saravanan

போட்டிகள்:

ஆகஸ்டு 1 - ஆண்களுக்கான டிங்கி (Men’s dinghy), பெண்களுக்கான டிங்கி (Women’s dinghy)

ஆகஸ்டு 2 - பெண்களுக்கான டிங்கி (Women’s dinghy), ஆண்களுக்கான டிங்கி (Men’s dinghy)

ஆகஸ்டு 3 - ஆண்களுக்கான டிங்கி (Men’s dinghy), பெண்களுக்கான டிங்கி (Women’s dinghy)

Nethra Kumanan

ஆகஸ்டு 4 - பெண்களுக்கான டிங்கி (Women’s dinghy), ஆண்களுக்கான டிங்கி (Men’s dinghy)

ஆகஸ்டு 5 - பெண்களுக்கான டிங்கி (Women’s dinghy), ஆண்களுக்கான டிங்கி (Men’s dinghy)

ஆகஸ்டு 6 - ஆகஸ்டு 7 : ஆண்களுக்கான டிங்கி பதக்கப் போட்டி, பெண்களுக்கான டிங்கி பதக்கப் போட்டி

14. ரோயிங் (Rowing) (ஜூலை 27 - ஆகஸ்டு 3)

முதல்முறையாக பங்கேற்கும் பால்ராஜ் பன்வார், ரோயிங் போட்டி வரலாற்றில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.

போட்டிகள்:

ஜூலை 27 - ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்

ஜூலை 28 - ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் ரெபிசேஜ்

ஜூலை 29 - ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் காலிறுதி

Balraj Panwar

ஜூலை 30 - ஆகஸ்டு 1- ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் அரையிறுதி

ஆகஸ்டு 2 - ஆகஸ்டு 3 - ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் பைனல்

15. ஜூடோ (Judo) (ஆகஸ்டு 2)

பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 25 வயதான துலிகா மான், ஜூடோவில் இந்தியாவிற்காக பதக்கத்தை கொண்டுவரும் முனைப்பில் உள்ளார்.

போட்டி: (ஆகஸ்டு 2)

Tulika Maan

பெண்களுக்கான +78 கிலோ தகுதிநீக்க சுற்றுகள்,

பெண்கள் +78 கிலோ கால் இறுதி,

பெண்களுக்கான + 78 கிலோ ரெபிசேஜ்,

பெண்கள் +78 கிலோ அரையிறுதி,

பெண்களுக்கான +78 கிலோ வெண்கலப் பதக்கம் A,

பெண்களுக்கான +78 கிலோ வெண்கலப் பதக்கம் B,

பெண்கள் +78 கிலோ பைனல்

16. நீச்சல் (ஜூலை 28 - ஜூலை 30)

Dhinidhi Desinghu

14 வயதேயான இந்தியாவின் இளம் வீராங்கனை தினிதி தேசிங்கு மற்றும் ஸ்ரீஹரி நடராஜ் இருவரும் பதக்க வேட்டைக்காக காத்திருக்கின்றனர்.

போட்டிகள்:

Srihari Nataraj

ஜூலை 28 - ஆண்களுக்கான 100மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸ், பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​ஹீட்ஸ்

ஜூலை 29 - ஆண்களுக்கான 100மீ பேக்ஸ்ட்ரோக் அரையிறுதி, பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் அரையிறுதி

ஜூலை 30 - ஆண்களுக்கான 100மீ பேக்ஸ்ட்ரோக் பைனல், பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பைனல்

இந்தியா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்த நிலையில், பாரீஸ் 2024-ல் எண்ணிக்கையை உயர்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 24 ஒலிம்பிக் தொடர்களில் இந்தியா இதுவரை 35 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.