HE BINGJIAO  முகநூல்
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக் | வெள்ளி பதக்கத்தை வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனையின் கையில் இருந்தது என்ன?

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், தங்கள் நாட்டுக்கொடியுடன் பதக்கத்தை ஏந்துவதைத்தான் பார்த்திருக்கிறோம், மாறாக, ஸ்பெயின் கொடியை பதக்கத்துடன் ஏந்தி நின்றார் சீன பேட்மிண்டன் வீராங்கனை. காரணம் என்னவென்று பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்: சந்தான குமார்

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், தங்கள் நாட்டுக்கொடியுடன் பதக்கத்தை ஏந்துவதைத்தான் பார்த்திருக்கிறோம், மாறாக, ஸ்பெயின் கொடியை பதக்கத்துடன் ஏந்தி நின்றார் சீன பேட்மிண்டன் வீராங்கனை. காரணம் என்னவென்று பார்க்கலாம்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் இறுதி போட்டியில் சீனாவின் HE BINGJIAO, கொரியாவின் AN -SE YOUNG விற்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் AN -SE YOUNG 21-13, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வாங்கும் போது HE VAIGARAI BINGJIAO , ஸ்பெயின் கொடி பொருந்திய ஒரு சிறிய அடையாளத்தை கையில் ஏந்தி நின்றார். HE BINGJIAO யிற்கு எதிரான அரை இறுதி போட்டியின் போது ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின் காயம் காரணமாக வெளியேறியது காரணமாக அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக HE BINGJIAO செய்த இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.