ஆலிஸ் ஃபினோட் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் சுவாரஸ்யம் | தடகள தளத்தில் இருந்து ஓடிவந்து காதலரிடம் ப்ரபோஸ் செய்த வீராங்கனை💕 #Video

பிரெஞ்சு தடகள வீராங்கனை ஒருவர், தனது காதலருக்கு புரபோஸ் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களுக்கு இடையே, சர்ச்சைக்கு இடமளிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பிரெஞ்சு தடகள வீராங்கனை ஒருவர், தனது காதலருக்கு ப்ரபோஸ் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரெஞ்சு தடகள வீராங்கனையான ஆலிஸ் ஃபினோட், 3000மீ ஸ்டீபிள்சேஸ் இறுதிப்போட்டியில் பங்கேற்றார். 33 வயதான இவர், இறுதிப்போட்டியில் 4வது இடமே பிடித்தார். என்றாலும் ஐரோப்பிய ஸ்டீப்பிள்சேஸ் சாதனையை இதில் முறியடித்தார்.

இந்நிலையில் பதக்கத்தை வெல்லவில்லை என்றாலும், மனம் தளராமல் தனது காதலருக்கு களத்திலேயே ப்ரபோஸ் செய்துள்ளார் அவர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவின்படி அந்த வீராங்கனை போட்டிக்குப் பிறகு தன் காதலர் இருக்கும் இடத்திற்குச் சென்று, மோதிரம் ஒன்றை எடுத்து மண்டியிட்டு தன் காதலைத் தெரிவிக்கிறார். அவரும் அந்தக் காதலை ஏற்றுக்கொண்டு வீராங்கனையை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இதைச் சுற்றியுள்ளவர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, சீனாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனையான ஹுவாங் யாகியாங், ஒலிம்பிக்கின் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவிற்கு தங்கப் பதக்கத்தைத் தேடித் தந்தார்.

பின்னர், தங்கப் பதக்கத்துடன் அவர் மேடையில் உற்சாகமாக வலம்வந்தபோது, அவரது காதலர் மோதிரம் அணிவித்து, ‘என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா’ எனக் கேட்டது எல்லோரையும் வியக்க வைத்தது. அந்த வீராங்கனையும் அந்தக் காதலை ஏற்றுக்கொண்டிருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.