SEINE நதி facebook
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்| மாசு அடைந்த SEINE நதி நீர்! நிறுத்தி வைக்கப்பட்ட TRIATHLON போட்டிகள்!

பாரிஸ் நகரில் உள்ள SEINE நதி நீர் மாசு அடைந்துள்ளது என ஆய்வு முடிவுகள் வெளியாகியதால் இன்று நடைபெற இருந்த ஆண்களுக்கான TRIATHLON போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

PT WEB

செய்தியாளர்: சந்தானகுமார்.

பாரிஸ் நகரில் உள்ள SEINE நதி நீர் மாசு அடைந்துள்ளது என ஆய்வு முடிவுகள் வெளியாகியதால் இன்று நடைபெற இருந்த ஆண்களுக்கான TRIATHLON போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தொடக்க விழா மற்றும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த SEINE நதியை கிட்டத்தட்ட 12,500 கோடி ரூபாய் செலவு செய்து சுத்தம் செய்தது பிரான்ஸ் அரசு. ஆனால், நீர் மாசுபாடு காரணமாக நதியில் நடக்கவிருந்த ஆண்களுக்கான TRIATHLON போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக SEINE நதியில் பயிற்சி மேற்கொள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அனுமதி அளிக்காத நிலையில் போட்டி தொடங்க ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டது ஒலிம்பிக் குழு.

இதுகுறித்து பேசியுள்ள ஒலிம்பிக் ஏற்பாடு குழு, கடந்த 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் பெய்த கன மழை காரணமாக SEINE நதியில் கழிவு நீர் கலந்தது காரணமாக இதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள போட்டிகள் ஜூலை 31 ஆம்தேதி நடைபெறும் எனவும் இயற்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான் பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கையை வழங்கியுள்ளது வானிலை ஆய்வு மையம் ஒருவேளை தொடர்ந்து மழை பெய்தால் TRIATHLON போட்டி எப்படி நடைபெறும் என்ற கேள்வி வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.