Kinzang Lhamo web
ஒலிம்பிக்ஸ்

’வலிமைக்கும் மனஉறுதிக்கும் ஒரு எடுத்துக்காட்டு..’ எழுந்து நின்று மரியாதை செய்த மக்கள்! என்ன நடந்தது?

Rishan Vengai

2024 பாரீஸ் ஒலிம்பிக்கை பொறுத்தவரை “7 ஆண்டுகள் உடைந்த ஈட்டியுடன் பயிற்சிபெற்று தங்கம் வென்றபிறகு உடைந்து அழுத அர்ஷத் நதீம், 5 முறை தொடர்ச்சியாக தங்கம் வென்று மல்யுத்த மேடையில் ஷூவை கழற்றி வைத்து எமோசனலாக ஓய்வை அறிவித்த கியூபா வீரர், தங்கம் வென்ற பிறகு பரிசாக வாத்து வேண்டும் எனக் கூறிய 14 வயது ஆஸ்திரேலியா வீராங்கனை, தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தை விட சிறிய நாடான செயிண்ட் லூசியா நாட்டிலிருந்து முதல்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர் ஜூலியன் ஆல்பிரட் தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்களை தட்டிச்சென்றது, காயத்தால் ஒரு அடிகூட அசைய முடியாமல் வலியால் துடித்த எதிரணி வீராங்கனையை தனியாளாக தூக்கிச்சென்று மருத்துவக்குழுவிடம் ஒப்படைத்த பிரேசில் வீராங்கனை” என பல்வேறு அழகான தருணங்கள் நடப்பு ஒலிம்பிக்கில் அரங்கேறியுள்ளன.

Tamires Moren Angola captain Albertina Kassoma

இந்நிலையில் இந்த அழகான தருணங்களை எல்லாம்தாண்டி, ஒலிம்பிக்கில் கடைசிநாளில் பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் கடைசி இடம்பிடித்த பூட்டான் வீராங்கனை எல்லோருடைய மனதையும் வென்றுள்ளார். அவர் விளையாட்டின் கடைசி இடமான 80வது இடத்தில் முடித்தபோதும், அசராத மன தைரியத்திற்காக பாராட்டுகளை தட்டிச்சென்றார்.

எழுந்து நின்று மரியாதை செய்த ரசிகர்கள்..

வலிமை மற்றும் விடாமுயற்சிக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டாய் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பூட்டானை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கின்சாங் லாமோ எல்லோருடைய கவனத்தையும் பெற்றார்.

இதையும் படிக்க: “ஒரு வாத்து வாங்க ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறுமி..”! 14 வயதில் நாட்டின் இளம் வீரராக சாதனை!

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மாரத்தானில், 2 மணிநேரம் 22 நிமிடம் 55 வினாடிகளில் அதிவேகமாக முதலிடத்தை பிடித்த நெதர்லாந்தின் சிஃபான் ஹாசன் சாதனை படைத்தாலும், அன்றைய நாளின் மிகப்பெரிய கைத்தட்டலை அவரால் பெறமுடியவில்லை. வேறு யார் பெற்றார் என்றால்? அது வெள்ளிவென்ற வீராங்கனையோ அல்லது வெண்கலம் வென்ற வீராங்கனையோ இல்லை.

Kinzang Lhamo

பெண்களுக்கான மாரத்தான் போட்டியின் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கத்துக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், பூட்டானை சேர்ந்த 26 வயது வீராங்கனையான கின்சாங் லாமோ தன்னுடைய தூரத்தை முடிக்காமல் நீட்டித்துகொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து ஓடிய 79 வீரர்களும் தங்களுடைய ஓட்டத்தை முடித்துவிட்டனர். அதாவது அவருக்கு முந்தைய 79வது வீரர் முடித்தபிறகு 1 மணிநேரம் 2 நிமிடங்கள் கழித்துதான் தன்னுடைய ஓட்டப்பந்தயத்தை கின்சாங் லாமோ முடித்தார்.

Kinzang Lhamo

வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்ட பிறகு 1.5 மணிநேரம் கழித்து, 3 மணிநேரம் 52 நிமிடங்கள் 59 வினாடிகளில் ஓடி ஓட்டப்பந்தயத்தை முடித்தாலும் பூட்டானின் ஓட்டப்பந்தய வீராங்கனையின் வலிமையையும் விடாமுயற்சியையும் பார்த்த மக்கள் கின்சாங் லாமோவுக்கு மிகப்பெரிய ஆரவாரத்தை எழுப்பினர். அவர் வெற்றிக்கோட்டை எட்டும்போது மிகப்பெரிய கைத்தட்டல்களை பெற்றார்.

கடைசி இடம்பிடித்தாலும் மனம் தளராமல் போராடிய அவர் ”விடாமுயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாய்” மாறினார்.