இந்திய வீரர் லக்ஷ்யா சென் Facebook
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்|பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாதனை படைத்த இந்திய வீரர் லக்ஷ்யா சென்!

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் புதிய சாதனையை படைத்துள்ளார்.

PT WEB

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் புதிய சாதனையை படைத்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்திய நட்சத்திரம் லக்ஷயா சென், சீன தைபே வீரர் சோ டைன் சென் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதல் செட்டை சீன தைபே வீரர் கைப்பற்றிய நிலையில் லக்ஷயா சென், அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றினார். இதனால் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை லக்ஷ்யா சென் படைத்துள்ளார்.

அதேசமயம், வில்வித்தையில் கலப்பு பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுகிறது.

அரையிறுதி சுற்றில் தென்கொரியாவின் ஷியோ லிம், வூஜின் கிம் இணையுடன் இந்திய ஜோடி தீரஜ் பொம்மதேவரா, அங்கிதா பகத் மோதியது. இதில் ஆதிக்கம் செலுத்திய தென்கொரியா இணை, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய ஜோடி, அடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடவுள்ளது.