Arjun Babuta web
ஒலிம்பிக்ஸ்

நூலிழையில் பறிபோன பதக்கம்.. இதயம் உடைந்த பட்டியலில் PT உஷா, மில்கா உடன் இணைந்த அர்ஜுன் பபுட்டா!

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அர்ஜுன் பபுட்டா நான்காம் இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்

Rishan Vengai

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அர்ஜுன் பபுட்டா தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே இறுதிச்சுற்றை எட்டி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் இறுதிச்சுற்றில் அழுத்தத்துடன் கடைசிவரை போராடிய அவர், பதக்கத்தை வெல்வதற்கு மிகஅருகில் வந்த பிறகு ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அழுத்தத்தின் கீழ் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

இறுதிச்சுற்றில் பபுட்டா மொத்தம் 208.4 ரன்களை எடுத்தார். குரோஷியாவின் மிரான் மரிசிச்சின் 10.7 புள்ளிகளுக்குப் பதில் அவர்பெற்ற 9.5 புள்ளிகள் மிகப்பெரிய மேடையில் பதக்கத்துடன் இடம்பெறும் நம்பிக்கையை உடைத்தது.

கடைசிநேர அழுத்தத்தில் தவறிப்போன பதக்கம்..

25 வயதான பபுட்டா 10.7 புள்ளிகளுடன் இறுதிப் போட்டியைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து 10.2 புள்ளிகளுடன் இருந்தார். மூன்றாவது ஷாட் 10.5 அவர் நான்காவது இடத்தைப் பிடிக்க உதவியது, அவரது நான்காவது முயற்சியில் 10.4 அவரை மூன்றாவது இடத்திற்கு உயர்த்தியது. அவர் முதல் சுற்றை திடமான 10.6 உடன் முடித்தார். இரண்டாவது சுற்றை 10.7 உடன் தொடங்கினார், அதைத் தொடர்ந்து அடுத்த சுற்றை 10.5 உடன் தொடங்கினார்.

Arjun Babuta

முதல் எலிமினேஷன் தொடரின் இரண்டாவது ஷாட்டில் 10.8-ஐ நெருங்கினார். அந்த முயற்சி அவரை இரண்டாவது இடத்திற்கு கொண்டுசென்றது, அதுமட்டுமில்லாமல் அந்த ஷாட் உலக சாதனை படைத்த சீன ஷெங் லிஹாவோவுக்கும் அவருக்கும் இடையே வெறும் 0.1 புள்ளி இடைவெளி என்ற இடத்திற்கு தள்ளியது. ஆனால் கடைசிநேர அழுத்தத்தில் அவர் தன்னுடைய முதல் ஒலிம்பிக்கை பதக்கத்துடன் கொண்டுசெல்வதில் நழுவவிட்டார். இது ஒருநாட்டிற்காக மிகப்பெரிய மேடையில் நிற்கும் பாதங்களின் அழுத்தம் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை காட்டியது.

இந்த நிகழ்வில் 252.2 என்ற ஒலிம்பிக் சாதனையுடன் லிஹாவோ முதலிடத்தைப் பெற்றார். ஸ்வீடனின் விக்டர் லிண்ட்கிரென் 251.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், குரோஷியாவின் மிரான் மரிசிச் (230) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அர்ஜுன் பபுட்டா 208.4 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தார்.

நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட வீரர்கள் பட்டியல்!

ஒலிம்பிக்ஸ் தொடர் வரலாற்றில் இதுவரை இந்தியா 35 பதக்கம் வென்றுள்ளது. ஒலிம்பிக்ஸ் தொடரில் தோல்வி மூலம் கிடைக்கும் வலியை விட, மிகபெரிய வலியை தருவது நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழப்பததுதான். அப்படி ஒலிம்பிக்ஸ் தொடரில் நான்காம் இடம் பிடித்த வீர்ரகள் பட்டியலில் எந்த ஒரு வீரரும் இடம்பிடிக்க விரும்பமாட்டார்.

அப்படிப்பட்ட ஒரு பட்டியலில் 17வது பெயராக அர்ஜுன் பபுட்டா இணைந்து உள்ளார்.

1- ரந்திர் ஷிண்டே - மல்யுத்தம் - 1928 antwerp ஒலிம்பிக்ஸ் .

2- கேஷவ் mhangave - மல்யுத்தம் - 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்ஸ்.

3- இந்திய ஆண்கள் கால்பந்து அணி - 1956 melbourne ஒலிம்பிக்ஸ்.

4- மில்கா சிங் - 400 மீட்டர் - 1960 ரோம் ஒலிம்பிக்ஸ்.

5- பிரேம் நாத் - மல்யுத்தம் - 1972 munich ஒலிம்பிக்ஸ்.

6- சுதேஷ் குமார் - மல்யுத்தம் - 1972 munich ஒலிம்பிக்ஸ்.

7- PT உஷா - 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் - 1984 - லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ்.

8- ரஜிந்தர் சிங் - மல்யுத்தம் - 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ்.

Arjun Babuta

9- லியாண்டர் பயஸ் / மகேஷ் பூபதி - டென்னிஸ் - 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ்.

10 - kunjarani dhevi - பளு தூக்குதல் - 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ்.

11- joydeep karmakar - துப்பாக்கி சுடுதல் - 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்.

12- அபினவ் பிந்த்ரா - துப்பாக்கி சுடுதல் - 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்

13- சானியா மிர்சா/ ரோகன் போபன்னா - டென்னிஸ் - 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்.

14- DIPA KARMAKAR - GYMNASTICS - 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்.

15-அதித்தி அசோக் - கோல்ஃப் - 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.

16- இந்திய மகளிர் ஹாக்கி அணி - 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.

17 - அர்ஜுன் பபுட்டா - துப்பாக்கி சுடுதல் - 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ்.