2024 paris olympics pt web
ஒலிம்பிக்ஸ்

அந்தரத்தில் தொங்கியபடி சாகசம்செய்த டாம் க்ரூஸ்! ஸ்னூப் டாக் இசைநிகழ்ச்சியுடன் ஒலிம்பிக் விழா நிறைவு!

ஒவ்வொரு நாளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முதல் நாளில் இருந்தே பதக்கங்களை குவிக்க தொடங்கின.

PT WEB

பாரிஸில் ஒலிம்பிக் திருவிழா நிறைவு பெற்றது. ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் சாகசங்கள், ஸ்னூப் டாக் இசை நிகழ்ச்சியுடன் நிறைவுபெற்ற ஒலிம்பிக் விழா.. நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கொண்டாட்டம்...40 தங்கம் உட்பட 126 பதக்கங்கள் வென்று அமெரிக்கா முதலிடம்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி மிக சிறப்பாக தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முதல் நாளில் இருந்தே பதக்கங்களை குவிக்க தொடங்கின.

மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போட்டிகளில் இந்தியா ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளியும், ஹாக்கி, துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் 5 வெண்கலமும் வென்று அசத்தியது.

ஒலிம்பிக் விதிகள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டிகளிலும் உலக சாதனைகளும், ஒலிம்பிக் சாதனைகளையும் படைத்த வீரர்கள் அவரவர் நாட்டிற்கு பெருமையை தேடி சேர்த்தனர். அதேநேரத்தில் பாலின சர்ச்சை, வினேஷ் போகத் எடை சர்ச்சை என ஒலிம்பிக் சர்ச்சைகளும் தொடர்ந்தன.

இப்படியான சூழலில் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், நிறைவு விழா பாரிஸ் நகரில் மிக சிறப்பாக நடைபெற்றது. ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஷின் சாகசங்கள், பில்லி ஐலிஸ் (BILLIE EILISH), ஸ்னூப் டாக்(SNOOP DOG) ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

அத்துடன் ஒலிம்பிக் அடுத்த முறை நடைபெறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகர் மேயர் கரன் பாஸிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது. ஒலிம்பிக் தீபத்தையும் பிரான்ஸ் ஒப்படைத்தது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதியில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலத்துடன் அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்தை சீனா பிடித்த நிலையில், 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 3 ஆவது இடத்தை ஜப்பானும், 4 ஆவது இடத்தை ஆஸ்திரேலியா 18 தங்கம், 19 வெள்ளி, 16வெண்கலத்தையும் பெற்று பிடித்துள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள்

பதக்கப் பட்டியல் - 71வது இடம் 1900 ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 25 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியா வென்ற மொத்த பதக்கங்கள் - 41

நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதல் - வெள்ளி

மனு பாக்கர் - 10 மீ. துப்பாக்கி சுடுதல் -வெண்கலம்

மனு பாக்கர் + சரப்ஜோத் சிங் இணை - 10 மீ. துப்பாக்கி சுடுதல் - வெண்கலம்

ஸ்வப்னில் குசலே - 50மீ. துப்பாக்கி சுடுதல் - வெண்கலம்

இந்திய அணி - ஆடவர் ஹாக்கி -வெண்கலம்

அமன் ஷெராவத் - மல்யுத்தம் 57 கி. எடைபிரிவு - வெண்கலம்

ஒலிம்பிக் போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் - 2024 (MAP GFX) மாநில வாரியாக பங்கேற்ற வீரர்கள் - பதக்கங்கள்

ஹரியானா - 24 ( 4 பதக்கங்கள் ) பஞ்சாப் - 19 (0) தமிழ்நாடு - 13 (0) கர்நாடகா - 7 (0) உத்தரப்பிரதேசம் - 6 (0) கேரளா - 6 (0) டெல்லி - 5 (0) மகாராஷ்டிரா - 4 (1 பதக்கம்) தெலங்கானா - 4 (0) ஆந்திரப் பிரதேசம் - 4 (0) உத்தராகண்ட் - 4 (0)