பெய்ஜிங் ஒலிம்பிக்கின் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்கா அணியை தகுதி நீக்கம் செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
இதனால் அந்த அணியில் இடம்பெற்றிருந்த உலகின் அதிவேக மனிதராக அறியப்படும் உசைன் போல்ட், தனது தங்கப்பதக்கத்தை இழந்தார். சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் உசைன் போல்ட் அடங்கிய ஜமைக்கா அணி 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றது. இந்தநிலையில், ஜமைக்கா அணியில் இடம்பெற்றிருந்த நெஸ்டா கார்ட்டர் ஊக்கமருந்து உட்கொண்டதாக ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, தங்கப்பதக்கத்தை திரும்பப் பெறுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து, 8ஆகக் குறைந்தது.