கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெறுவதில் சந்தேகம் உள்ளதாக போட்டி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக, வரும் ஜுலை மாதம் இறுதியில் தொடங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் கொரோனா பாதிப்பால், ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், போட்டிகளுக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போட்டி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முடோ, அடுத்தாண்டும் ஒலிம்பிக்கில் நடைபெறுமா என்பதை தற்போது கூற இயலாது என தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். போர் காரணம் இன்றி உடல்நலன் சார்ந்து பாதிக்கப்பட்ட முதல் ஒலிம்பிக், டோக்கியோ ஒலிம்பிக் என்பது குறிப்பிடத்தக்கது.