நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சேஹலுக்குப் பதிலாக, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நான்காவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வீரர்களின் ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு 92 ரன்னில் இந்திய அணி சுருண்டது, இதே மைதானத்தில்தான் என்பதால், இந்தப் போட்டியிலும் பிட்ச் அப்படித்தான் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பிட்ச் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும் என்றும் முதலில் பேட் செய்யும் அணி, 200 ரன்னுக்கு மேல் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கிறது பிட்ச் ரிப்போர்ட்.
அணி விவரம்:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், விஜய் சங்கர், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.
நியூசிலாந்து:
டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிராண்ட்ஹோம், சன்ட்னர், டிம் சவுதி, சோதி, பிளேர் டிக்னர்.