விளையாட்டு

உலகக் கோப்பை யாருக்கு..? மூன்று விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து..!

உலகக் கோப்பை யாருக்கு..? மூன்று விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து..!

webteam

உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை நியூசிலாந்தை சேர்ந்த வில்லியம்சன் படைத்துள்ளார். 

உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்தில் 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது வோக்ஸ் பந்தில் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் தொடக்கம் முதலே சற்று நிதானமாக விளையாடினார். இவரும் நிக்கோலஸூம் இரண்டாவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் சேர்த்தனர்.

இதனையடுத்து வில்லியம்சன் 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது பிளன்கெட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வில்லியம்சன் 30 ரன்கள் அடித்தன் மூலம் உலகக் கோப்பையில் கேப்டனாக அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனேவின் 549 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார். தற்போது நியூசிலாந்து அணி 26.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.