விளையாட்டு

10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்ற ஜோகோவிச் - 22 கிராண்ட் ஸ்லாம் வென்று நடால் சாதனை சமன்

10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்ற ஜோகோவிச் - 22 கிராண்ட் ஸ்லாம் வென்று நடால் சாதனை சமன்

சங்கீதா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று மீண்டும் சாதனைப் படைத்துள்ளார்.

மெல்பர்ன் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும் - கிரீஸ் வீரர் சிட்சிபாஸும் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்
போட்டியில் ஜோகோவிச் 6-3 , 7-6 , 7 -6 என்ற கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி 10-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். இதன் மூலம் அவர் மீண்டும்
உலகின் முதல் நிலை வீரரானார். 

மேலும், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் நடாலுடன், ஜோகோவிச்சும் இணைந்துள்ளார். இருவரும் தலா 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். ஜோகோவிச்சின் இந்த 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் ஆஸ்திரேலிய ஓபன் 10 முறையும், விம்பிள்டன் 7 முறையும், யு.எஸ். ஓபன் 3 முறையும், பிரெஞ்ச் ஓபன் 2 முறையும் இதில் அடங்கும்.