விளையாட்டு

சேப்பாக்கம் ஸ்டேடியம் போறீங்களா? இதுக்கெல்லாம் அனுமதி இல்லை!

webteam

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்குள் செல்ல ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தினமும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போட்டியை மீறி நடத்தினால்
முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று சில அறிவித்துள்ளன. ஆனால் போட்டியை நடத்தியே தீருவோம் என்றும் அரசிய லுக்குள் விளையாட்டை இழுக்க வேண்டாம் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடை பெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன. இதையடுத்து சுமார் 4000 போலீசார் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகின் றனர். சேப்பாக்கம் மைதானம் உள்ள பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதி யில் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

பல்வேறு சோதனைகளுக்குப் பின்பே ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.   அவர்களுக்கு கடும் கட்டுப் பாடு கள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பேக், சூட்கேஸ்கள், செல்போன்கள், மடிக்கணினி, ரிமோட்டில் இயங்கும் கார் சாவி உள்ளிட்ட எந்தவித எலக்ட் ரானிக் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது. வீடியோ கேமரா, பைனாகுலர், ஆடியோ பதிவு செய்யும் கருவி, இசை சம்பந்தமான கருவி, சிகரெட், தீப்பெட்டி, வெடிபொருட்கள், பட்டாசுகள், கண்ணாடி பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், தெர்மா கோல் அட்டை, தண்ணீர் பாட்டில், கருப்பு நிற கைக்குட்டை, கருப்பு கொடி, கருப்பு துணிகள், குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. 

தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலோ, சட்ட விரோத செயல்களிலோ, வன்முறையிலோ, இன வெறியை தூண்டும் விதமாக கோஷம் போட்டாலோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். மைதானத்தின் சோதனை பகுதியில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வைக்க அறைகள் ஏதுமில்லை என்பதால் அதை கொண்டுவராமல் இருப்பதே நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.