விளையாட்டு

நியூஸிலாந்தை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் - 421 ரன்கள் குவிப்பு

நியூஸிலாந்தை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் - 421 ரன்கள் குவிப்பு

webteam

நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 9வது பயிற்சிப் போட்டி நியூஸிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இங்கிலாந்தில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதல் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கெயில் மற்றும் லெவிஸ் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினர். 36 (22) ரன்களில் கெயில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின்னர் வந்த கீப்பர் சாய் ஹோப் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். லெவிஸ் 50 (54) ரன்கள் எடுத்து அவுட் ஆக, தொடர்ந்து விளையாடி ஹோப் சதமடித்தார். பின்னர் 101 (86) ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்த வந்த வீரர்களும் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 421 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் 47 (32) மற்றும் ஆல்ரவுண்டர் ரஸல் 54 (25) ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.