விளையாட்டு

90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் : மீண்டு வருமா இந்தியா ?

webteam

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2வது நாள் முடிவில் இந்திய அணி 90 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் பிருத்வி ஷா மற்றும் மயாங்க் அகர்வால் சொற்பன ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் விராட் கோலியும் 14 (30) ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ரஹானே, உமேஷ் யாதவ் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகினர்.

முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 63 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அரை சதம் அடித்திருந்தனர். நியூசிலாந்து அணியில் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 73.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் டாம் லாதம் அரை சதம் அடித்திருந்தார். பவுலர் ஜெமிசன் 49 ரன்கள் சேர்த்து அரை சதத்தை தவறவிட்டார். இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தற்போது இந்திய நியூசிலாந்து அணியை விட 97 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இருப்பினும் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருக்கிறது. களத்தில் விஹாரி 5 (12) ரன்கள் மற்றும் ரிஷாப் பண்ட் 1 (1) ரன் எடுத்த நிலையில் உள்ளனர். 3வது நாளான நாளை இந்தியா மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.