விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 375 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 375 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து

webteam

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. 2-வது டெஸ்ட் போட்டி, ஹாமில்டனில் நேற்று தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராவல் 5 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதமுடன் கேப்டன் வில்லியம்சன் இணைந்தார். வோக்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்சன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஸ் டெய்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அரைசதம் கடந்த அவர், 53 பந்துகளில் ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டையும் வோக்ஸ் கைப்பற்றினர்.  பின்னர் லாதமுடன், நிக்கோலஸ் இணைந்தார். நிதானமாக ஆடிய லாதம் சதம் அடித்தார்.  மழை காரணமாக, தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் நடக்கவில்லை.  முதல் நாளில் 54.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து அணி. 

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அந்த அணி 375 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. லாதம் 105 ரன்களும் மிட்செல் 73 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளும் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும் சாம் குர்ரன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 24 ரன்களுடனும் கேப்டன் ரூட் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.