விளையாட்டு

இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட்: 10 விக்கெட்டுகளையும் தூக்கிய நியூசி., வீரர் அஜாஸ் படேல்

இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட்: 10 விக்கெட்டுகளையும் தூக்கிய நியூசி., வீரர் அஜாஸ் படேல்

JustinDurai
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பின் இந்தியா 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல், இந்திய வீரர்களின் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை அஜாஸ் பட்டேல் பெற்றுள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்தின் ஜிம்லேக்கர், இந்தியாவின் அணில் கும்ப்ளே பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.