விளையாட்டு

கிரிக்கெட்டில் புதிய தொடர்கள்: ஐசிசி அறிவிப்பு

கிரிக்கெட்டில் புதிய தொடர்கள்: ஐசிசி அறிவிப்பு

webteam

கிரிக்கெட்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் லீக் தொடர்களை நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் ஆக்லாந்தில் இன்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஐசிசி நிர்வாகிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

டெஸ்ட் லீக் தொடர் 2019-ம் ஆண்டிலிருந்தும், ஒருநாள் லீக் தொடர் 2020-ம் ஆண்டிலிருந்தும் தொடங்கவுள்ளதாக தெரிவித்தனர். டெஸ்ட் லீக்கில் பங்கேற்கும் அணிகள் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடவேண்டும். இதில் சொந்த மண்ணில் 3 தொடர்களும் வெளிநாடுகளில் 3 தொடர்களிலும் விளையாட வேண்டும். குறைந்தபட்சம் 2 போட்டிகளும் அதிகபட்சமாக 5 போட்டிகள் கொண்ட தொடராக இருக்க வேண்டும் என கூறினர். 2019ஆம் ஆண்டு தொடங்கும் டெஸ்ட் லீக்கின் இறுதிப் போட்டி 2021இல் இங்கிலாந்தில் நடைபெறும் என தெரிவித்தனர்.

இதேபோல், ஒருநாள் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் தலா 8 தொடர்களில் விளையாட வேண்டும். சொந்த மண்ணில் 4 தொடர்களும், வெளிநாடுகளில் 4 தொடர்களிலும் விளையாட வேண்டும்.