விளையாட்டு

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: நியூசி. அணி 371 ரன் குவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: நியூசி. அணி 371 ரன் குவிப்பு

webteam

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 371 ரன் குவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. 

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, மவுண்ட் மான்கானுயி-யில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. அதன்படி, வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா தலைமை யிலான இலங்கை அணி பந்துவீசியது.

(நீஸம்)

நியூசிலாந்து அணி, இலங்கை பந்துவீச்சை சிதறடித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடியில் நியூசிலாந்து அணி, 7 விக்கெட்டை இழந்து, 371 ரன் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 138 ரன் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 76 ரன்னும் ரோஸ் டெய்லர் 54 ரன்னும் எடுத்தனர். ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஸம், 49 ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர் விளாசி மிரட்டினார். அவர் 13 பந்தில் 47 ரன் எடுத்தார். 

இலங்கை தரப்பில் மலிங்கா, பெரேரா, பிரதீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 372 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் டிக்வெல் லாவும் குணதிலகாவும் ஆடி வருகின்றனர். இலங்கை அணி கடந்த 2 ஆண்டுகளில் 44 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 33 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.