விளையாட்டு

“நடுப்பகுதியில் விளையாடும் வீரர்கள் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும்” - விராட் கோலி

“நடுப்பகுதியில் விளையாடும் வீரர்கள் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும்” - விராட் கோலி

webteam

நடுப்பகுதியில் இன்னும் அதிகமான ரன்களைச் சேர்க்க நாங்கள் முயற்சி செய்ய வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.  நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில், இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 324 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 87 ரன்களும் தவான் 66 ரன்களும் விராத் கோலி 43 ரன்களும் ராயுடு 47 ரன்களும் தோனி 48 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 325 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 40.2 ஓவரில் 234 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. 90 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம்.  பேட்டிங்கில் அனைவரும் சமநிலையுடன் விளையாடினோம். ஆனால் இன்றைய நியூசிலாந்து ஆட்டத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு மனநிறைவு இல்லை. 

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்த ரன் குவிப்பு 30 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரை ரன் சேர்க்கும் வேகம் குறைந்து விட்டது. எதிர்பார்த்த அளவுக்கு ரன் சேர்த்திருந்தால், 340 - 350 ரன்களை எட்டியிருக்கும். உலகக்கோப்பை நெருங்கிவரும் நிலையில், நடுப்பகுதியில் விளையாடும் வீரர்கள் ரன் சேர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும்.

குல்தீப் யாதவ் (4/45), சாஹல் (2/52) என 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோஹித், தவண் அமைத்துக்கொடுத்த அடித்தளம் இன்றைய போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணம். ரோஹித், தவண் நல்ல புரிந்துணர்வோடு விளையாடுகிறார்கள். ஒரு அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைதல் வெற்றிக்கு முக்கியமானது” எனத் தெரிவித்தார்.