விளையாட்டு

"என்னுடைய ஹீரோ மறைந்துவிட்டார்"-மாரடோனாவுக்கு கங்குலி இரங்கல்

"என்னுடைய ஹீரோ மறைந்துவிட்டார்"-மாரடோனாவுக்கு கங்குலி இரங்கல்

jagadeesh

என்னுடைய ஹீரோ மறைந்துவிட்டார் என்று கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான டீகோ மாரடோனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபது வயதான மாரடோனா அவரது வீட்டில் இருந்தபோது உயிரிழந்தார். அர்ஜென்டினா அணிக்காக கடந்த 1986 இல் உலக கோப்பையை வென்று கொடுத்தவர் மாரடோனா. நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டவர் மாரடோனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சையான ‘கடவுளின் கை’ என்ற கோல் பரவலாக அறியப்படுகிறது. கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாரடோனா தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு சவுரவ் கங்குலி உருக்கமான இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில "என்னுடைய ஹீரோ மறைந்து விட்டார். உங்களுக்காகவே நான் கால்பந்து போட்டிகளை பார்த்தேன். நான் தீவிர பைத்தியமாக இருந்த மேதை, ஆழ்ந்த அமைதியடைந்துவிட்டார்" என தெரிவித்துள்ளார்.