விளையாட்டு

”தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாட வேண்டும் என்பதே என் கனவு” - சேத்தன் சகாரியா

”தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாட வேண்டும் என்பதே என் கனவு” - சேத்தன் சகாரியா

kaleelrahman

"தோனியின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது கனவு, என்னை பந்துவீச்சாளராக உருவாக்க அவர் உதவுவார்"என சேத்தன் சகாரியா தெரிவித்தார்.

ரஞ்சி போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் அரங்கில் நுழைந்தார் சேத்தன் சகாரியா. ஐபிஎல் 2021 ஏலம் தனது வாழ்க்கையை 'மாற்றிய' ஒன்றாக குறிப்பிட்டுள்ள சேத்தன் சகாரியா, எம்எஸ்.தோனியின் கீழ் விளையாடுவது தனது 'கனவு' என்று கூறினார், மேலும் நான் ஒரு பந்து வீச்சாளராக 'வளர' தோனி உதவுவார் என்றும் கூறினார்.

'தோனியின் ஆலோசனையால் எனது ஆட்டத்தை வேறு நிலைக்கு கொண்டு செல்ல முடியும். நான் இந்தியாவுக்காக குறைந்தது 10 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்,' என்று அவர் கூறினார். முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனியின் விக்கெட்டை சகாரியா சாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் 15ஆவது சீசனையொட்டி, வரும் பிப்ரவரி 12, 13ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.