விளையாட்டு

தர்மசாலா டெஸ்ட்: குழப்பத்தை ஏற்படுத்திய விஜயின் கேட்ச்

தர்மசாலா டெஸ்ட்: குழப்பத்தை ஏற்படுத்திய விஜயின் கேட்ச்

webteam

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4ஆவது டெஸ்ட் ஹிமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்து வருகிறது.

இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட்டுக்கு விளையாடிய ஹசல்வுட், அஸ்வின் பந்துவீச்சில் முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் உள்ள நடுவரும் அதனை அவுட் என அறிவிக்க, இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான விஜய், பேட்டிங் செய்வதற்கு தயாராவதற்காக ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். ஆனால், முரளி விஜய் சரியாக பந்தை கேட்ச் செய்யவில்லை என்று கூறி மூன்றாவது நடுவர், ஹசல்வுட் அவுட் இல்லை என அறிவித்தார். மூன்றாவது நடுவரின் இந்த முடிவு அதிகம் உணர்ச்சிவசப்படாத இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானேவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதை, அவரது முகம் காட்டியது. ஆனால், மூன்றாவது நடுவரின் இந்த அறிவிப்பு இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அடுத்த இரண்டாவது பந்தில் ஹசல்வுட்டை எல்பிடபிள்யூ முறையில் அஸ்வின் வெளியேற்றினார்.