விளையாட்டு

காயம்: தமிழக அணியில் இருந்து வெளியேறினார் முரளி விஜய்

காயம்: தமிழக அணியில் இருந்து வெளியேறினார் முரளி விஜய்

webteam

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியில் இருந்து முரளி விஜய் விலகியுள்ளார்.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய்-க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக எம்.சித்தார்த் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.