விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய `முதல் இந்திய வீரர்’ முரளி ஶ்ரீ சங்கர்

உலக சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய `முதல் இந்திய வீரர்’ முரளி ஶ்ரீ சங்கர்

நிவேதா ஜெகராஜா

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நீளம் தாண்டுதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார் இந்திய வீரர் முரளி ஶ்ரீ சங்கர். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவின் ஒரிகான் நகரில் நேற்று கோலாகலமாக துவங்கியது. ஜூலை 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா சார்பில் 22 வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா தலைமையில் சென்றுள்ள இந்த அணி பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குண்டெறிதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தஞ்சிந்தர்பால் சிங் போட்டியில் பங்கேற்காமல் வெளியேறினார். அதேபோல 20 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியங்கா கோஸ்வாமி 34 இடத்திலும் சந்தீப் குமார் 40வது இடமும் பிடித்து வெளியேறினர்.

இதன் பின் நீளம் தாண்டுதல் பிரிவில் உலகின் நம்பர் 12 வீரராக இருக்கக்கூடிய முரளி ஶ்ரீ சங்கர் அதிகபட்சமாக 8 மீ தாண்டி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீளம் தாண்டுதல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதேபோல 3000 m steeplechase பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சப்ளே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்