விளையாட்டு

பிளே ஆப் சுற்று: ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி!

பிளே ஆப் சுற்று: ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி!

webteam

இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது, ஐபிஎல் தொடர்! இன்றோடு முடிகின்றன லீக் சுற்றுப் போட்டிகள். அடுத்து பிளே ஆப் சுற்று.

புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. டெல்லி, பெங்களூரு அணிகள் வெளியேறிவிட்டன. மீதமிருக்கும் ஒரு இடத்துக்கு மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் போட்டியில் இருக்கின்றன. அந்த ஓர் அணியை, இன்று நடக்கும் லீக் போட்டிகள் தீர்மானிக்கும்.

மும்பை இண்டியன்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இன்று சந்திக்கிறது. மாலை நான்கு மணிக்கு நடக்கும் இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மும்பை. இதில் வென்றால்தான் அடுத்தச் சுற்றுக்குச் செல்ல முடியும். புள்ளிப்பட்டியலில் 12 பாயின்ட்களுடன் இருக்கும் மும்பை அணி, இதில் தோற்றால் வெளியேற வேண்டியதான். அதனால் இன்று கடுமையாக அந்த அணி போரா டும். 

டெல்லி அணி, மும்பையை இதற்கு முன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக இன்று மும்பை களமிறங்கலாம். அல்லது மும்பைக்கு மீண்டும் ஷாக் கொடுக்கலாம் டெல்லி.

பஞ்சாப் அணி 6 வெற்றி, 7 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று, ரன் ரேட்டிலும் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே அந்த அணியின் அடுத்தச் சுற்று கனவு நனவாகும். அதோடு பஞ்சாப் பிளேஆப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமென்றால் மும்பை அணி, டெல்லி டேர்டெவில்ஸிடம் தோற்க வேண்டும்.

நடக்குமா இதெல்லாம்?