விளையாட்டு

தோனியும் ஸிவாவும் ! சென்னை கடற்கரையில் க்யூட் விளையாட்டு

webteam

தோனியின் மகள் ஸிவா கடலலையைக் கண்டு பயந்து ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

ஐபிஎல்க்கு பிறகு தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ஆஸ்தான வீரராக தோனி ஆனார். அவருக்கு தல என்ற பட்டத்தைக் கொடுத்து தங்கள் தலைக்கும் மேல் தூக்கி வைத்தனர் தமிழக ரசிகர்கள். தோனியும் என் இரண்டாம் வீடாக சென்னை இருக்கிறது என்று அடிக்கடி சொல்லி சென்னை மீதான காதலை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் கிரிக்கெட்டில் கடந்து வந்த 50 ஆண்டுகள் பயணத்தை ‘காபி டேபிள் புக்’ என்ற பெயரில் வெளியிட்டார். இந்திய கிரிக்கெட் போர்டில் பல்வேறு முன்னணி மாற்றங்களை கொண்டு வந்ததில் சீனிவாசனுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தப் புத்தக வெளியீட்டு விழா கடந்த 28ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'காபி டேபிள்' புத்தகத்தை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி பெற்றுக்கொண்டார். இந்த விழாவுக்காக தோனி மட்டுமல்லாது அவரது மனைவி சாக்‌ஷி மகள் ஸிவாவும் சென்னை வந்தனர்.

தன் குடும்பத்துடன் சென்னை வந்த தோனி கடற்கரையில் குடும்பத்துடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மகள் ஸிவாவை வைத்துக்கொண்டு கடல் அருகே நின்று தோனி விளையாடுகிறார். கடலலையை பார்த்து ஸிவா பயந்து ஒதுங்குதும் பிறகு ரசிப்பதுமாக உள்ளது. அந்த வீடியோவை தமிழக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்