இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக இ-ஸ்போர்ட்ஸ் நிறுவனமான MPL உடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பிசிசிஐ. கடந்த 2016 முதல் 2020 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்ஸராக NIKE நிறுவனம் இருந்தது. ஐந்து வருட கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக MPL உடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
வீரர்களின் ஜெர்ஸி மற்றும் கிரிக்கெட் கிட்களை MPL தயாரித்து கொடுக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிசிசிஐ. நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு MPL இந்திய கிரிக்கெட்டின் ஆடவர், மகளிர் மற்றும் அண்டர் 19 அணிகளுக்கு ஸ்பான்ஸராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ள தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த MPL நிறுவனத்தின் புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.