விளையாட்டு

ஸ்டெயினுக்கு பிறகு மோர்னே மோர்கல்!

ஸ்டெயினுக்கு பிறகு மோர்னே மோர்கல்!

webteam

தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலே மைதானத்தில் நடந்து வருகிறது. 

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 311 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 141 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட் எடுத்தார். இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளும்  இழந்து 255 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் வேகபந்து வீச்சாளர்கள் ரபாடா மற்றும் மோர்னே மோர்கல் தலா 4 விக்கெட்டுகள் விழ்த்தினார். 85 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள தென் ஆப்ரிக்கா அணியின் மோர்கல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய 5-வது தென் ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் டொனால்டு, ஷான் பொல்லாக், நிதினி, ஸ்டெயின் ஆகியோர் 300-க்கு மேல் வீழ்த்தி இருந்தனர். 33 வயதான மோர்கல் அடுத்த போட்டியுடன்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது குறிப்பிடத்தக்கது.