விளையாட்டு

ஒரு ரன்னில் ஆட்டமிழந்த கே.எல். ராகுல் - முகமது கைஃப் என்ன சொன்னார் தெரியுமா?

ஒரு ரன்னில் ஆட்டமிழந்த கே.எல். ராகுல் - முகமது கைஃப் என்ன சொன்னார் தெரியுமா?

JustinDurai

''காயத்தில் இருந்து மீண்டு வரும் ஒவ்வொரு பேட்டருக்கும் இக்கட்டான ஒரு சூழல் வரும்'' என்கிறார் முகமது கைஃப்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஐபிஎல் 2022 தொடருக்குப் பிறகு முதல்முறையாக பேட்டிங் செய்த கே.எல்.ராகுல் வந்த வேகத்தில் நடையைக் கட்டியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் கே.எல்.ராகுலின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எல்.ராகுல் களத்திற்கு திரும்பியிருப்பதால் தடுமாறுவது இயல்பான விஷயம்தான். அவரது ஃபார்மை பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன்.

விக்கெட் இழந்ததும் நேராக வலைப்பயிற்சிக்கு சென்றார். இன்னும் ஒரு மேட்ச் இருக்கிறது. அந்த போட்டியில் அவர் பேட் செய்ய வரும்போது சிறிது நேரம் செலவிட வேண்டும்; கொஞ்சம் போராட வேண்டும். ஒற்றைப்படை எண்ணில் விக்கெட் இழப்பது நடக்கக்கூடாத விஷயம் அல்ல.

காயத்தில் இருந்து மீண்டு வரும்போது ஒவ்வொரு பேட்டருக்கும் அவரது வாழ்க்கையில் அத்தகைய ஒரு கட்டம் இருக்கும். அதனால் 2வது போட்டியில் அவர் ஆட்டமிழந்தது குறித்து நான் அதிகம் கவலைப்பட மாட்டேன்" என்றார்.

வரவிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!