விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பாக். வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் 

ஓய்வை அறிவித்தார் பாக். வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் 

webteam

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர்(27). இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார். 

இந்நிலையில் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கவுள்ளன. எனவே இதற்கு பாகிஸ்தான் அணி பல நல்ல இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்பதற்காக நான் முடிவு எடுத்துள்ளேன். ஆகவே நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.