விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்டின் மிஸஸ் கூல் மிதாலி… மேலும் ஒரு உலக சாதனை

webteam

மிஸஸ் கூல் என்றழக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். 
உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் மிதாலி ராஜ், 34 ரன்கள் எடுத்த போது இந்த சாதனையைப் படைத்தார். 183ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,992 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸின் சாதனையை முறியடித்தார். 16 வயதில் சதமடித்ததன் மூலம் மிக இளம் வயதில் சதமடித்த வீராங்கனை, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்த வீராங்கனை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மிதாலி ராஜ் படைத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்றும் மிதாலி புகழப்படுவதுண்டு.