மகளிர் உலகக் கோப்பை தொடரின் ஐசிசி கனவு அணியின் கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் கேப்டனாக அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்ற மிதாலி, பேட்டிங்கிலும் ஜொலித்தார். 9 போட்டிகளில் விளையாடிய மிதாலி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களின் உதவியுடன் 409 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த பட்டியலில் 410 ரன்களுடன் முதலிடம் பிடித்த இங்கிலாந்தின் டாம்ஸின் பீமாண்ட்டும் ஐசிசி கனவு அணியில் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்துமுடிந்த மகளிர் உலகக் கோப்பை தொடரின் கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டது. இந்த அணியின் கேப்டனாக மிதாலி அறிவிக்கப்பட்டுள்ளார். மிதாலி ராஜ் தவிர ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய இந்திய வீராங்கனைகளும் ஐசிசியின் கனவு அணியில் இடம்பிடித்துள்ளனர். ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரின் கனவு அணி:
1.டாம்ஸின் பீமாண்ட் (இங்கிலாந்து)
2.லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா)
3.மிதாலி ராஜ் (இந்தியா) – கேப்டன்
4.எல்ஸி பெர்ரி (ஆஸ்திரேலியா)
5.சாரா டெய்லர் (இங்கிலாந்து) – விக்கெட் கீப்பர்
6.ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா)
7.தீப்தி ஷர்மா (இந்தியா)
8.மரிஸான் காப் (தென்னாப்பிரிக்கா)
9.டேன் வான் நீகெர்க் (தென்னாப்பிரிக்கா)
10.அன்யா ஸ்ருப்சோல் (இங்கிலாந்து)
11.அலெக்ஸ் ஹார்ட்லி (இங்கிலாந்து)
12.நடாலி ஸ்கீவெர் (இங்கிலாந்து).