விளையாட்டு

மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் !

மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் !

webteam

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் அணியுடனான டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வெற்றிப் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றது. இதனையடுத்து நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஆயிஷா ஸாபர், கேப்டன் ஜாவேரியா கான் களமிறங்கினர்.
அருந்ததி ரெட்டியின் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி ஆயிஷா ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஓமைமா சோஹைல் 3 ரன்களுடனும், கேப்டன் ஜாவேரியா 17 ரன்களும் எடுத்த நிலையில் ரன் அவுட்டாயினர். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த பிஸ்மா மற்றும் நிடா ஜோடி ஓரளவுக்கு நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 
இதில் பிஸ்மா 54 ரன்களிலும், நிடா 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி தடுமாறியது இதன் காரணமாக 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணியால் 133 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 
இந்திய தரப்பில் ஹேமலதா, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதற்கடுத்து இந்திய தொடக்க ஜோடிகள் மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தானா களமிறங்கினர். இதில் மந்தானா 26 ரன்களுடனும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் அனுபவ வீராங்கனையான மிதாலி ராஜ் அதிரடியாக விளையாடினார். மிதாலி 7 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 56 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து 
ஹர்மன்ப்ரீத் கெளர் 14, வேதா கிருஷ்ணமூர்த்தி 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பெற செய்தனர்.