பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மாற்ற வேண்டும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். 2016 ஆம் ஆண்டில் இருந்து இவர் அந்நாட்டின் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது பதவி காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்று முடிவிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதையடுத்து அணியின் செயல்பாடுகள் குறித்து, அந்த கிரிக் கெட் அணி மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது.
அப்போது பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மாற்றிவிட்டு, சுழல் பந்துவீச்சாளர் சதாப் கானை குறு கிய ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாகவும் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பாபர் அசாமை நியமிக்கலாம் என்றும் தெரிவித் துள்ளார். அதோடு இன்னும் இரண்டு வருடங்கள் பாகிஸ்தான் அணியில், தான் இருந்தால் அணியை இன்னும் சிறப்பான நிலைக்கு கொண்டுவர முடியும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.