விளையாட்டு

ஏமாற்றிய விராட்.. ஆனாலும் விளாசிய ஆர்சிபி.. ! மும்பைக்கு 202 டார்கெட்..!

EllusamyKarthik

துபாயில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையிலான ஆட்டத்தில் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு. 

டாஸை இழந்து முதலில் பேட் செய்த பெங்களூரு 201 ரன்களை 3 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. 

பெங்களூரு அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தேவ்தத் படிக்கலும், ஆரோன் பின்சும் 81 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 

அதில் படிக்கல் 40 பந்துகளில் 51 ரன்களும், பின்ச் 35 பந்துகளில் 52 ரன்களும் குவித்திருந்தனர்.

கோலி 3 ரங்களில் அவுட்டாக, டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்களை குவித்து அசத்தினார். 

ஷிவம் துபே 10 பந்துகளில் 27 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். 202 இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் இன்னும் சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.