விளையாட்டு

ஸ்டம்பில் மோதிய பேட்.. ஹிட் அவுட்டாகி வெளியேறிய ஹர்திக் பாண்டியா

EllusamyKarthik

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஹிட் அவுட் முறையில் அவுட்டாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடந்த 2019 செப்டம்பரிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார்.

காயத்திலிருந்து மீண்ட அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் இழந்த பார்மை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சென்னை அணியுடனான முதல் போட்டியில் வெறும் 14 ரன்களில் அவுட்டானார். 

கொல்கத்தாவுடன் இன்றைய போட்டியில் மும்பை ரன் ரேட்டில் லீட் கொடுத்த போது ஹர்திக் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஹர்திக் ரஸ்ஸலின் பந்தில் அவுட்டானார்.

வொய்ட் யாக்கராக வீசப்பட்ட அந்த பந்தை ஹர்திக் கிரீஸுக்கு பின்னால் சென்று ஆப் சைடில் ஆட முயன்ற போது பேட் ஸ்டெம்பில் பட்டு ஹிட் அவுட்டாகி வெளியேறினார். மைதானத்தை விட்டு வெளியேறி தன்னுடைய இடத்தில் அமரும் வரை ஹிட் அவுட் ஆனதை நினைத்து சிரித்துக் கொண்டே சென்றார்.

இதற்கு முன்னதாக யுவராஜ் சிங், டேவிட் வார்னர், சவுரப் திவாரி, ஜடேஜா ஆகியோரும் ஐபிஎல் போட்டிகளில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகி உள்ளனர்.