சர்வதேச மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லான்னிங், தனிநபர் அதிகபட்ச ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டி-20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதலா வது டி-20 போட்டியில், முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டு இழப்புக்கு 226 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டனான மெக் லான்னிங், 63 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் குவித்தார். பிஎல் மூனி 54 ரன்களை எடுத்தார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
2014ஆம் ஆண்டு அயர்லாந்து பெண்கள் அணிக்கு எதிரான போட்டியில், தனிநபர் அதிகபட்ச சாதனையை மெக் லான்னிங் படைத்தார். அப்போது அவர் 126 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை கடந்த ஜூன் மாதம் ஜெர்மனி அணிக்கு எதிரான ஆட்டத்தில், நெதர்லாந்து வீராங்கனை காலீஸ் ஆட்டமிழக்காமல் 126 ரன்களை எடுத்து முறியடித்தார். இப்போது 133 ரன்கள் குவித்து இந்தச் சாதனையையும் முறியடித்துள்ளார்.