விளையாட்டு

“அனைவருக்கும் நன்றி” - இந்தியா திரும்பினார் பி.வி.சிந்து

“அனைவருக்கும் நன்றி” - இந்தியா திரும்பினார் பி.வி.சிந்து

webteam

டோக்கியோவில் இருந்து டெல்லி வந்த பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் பி.வி. சிந்து. ரியோ மற்றும் டோக்கியோ என அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள அவரை பிரதமர், குடியரசுத் தலைவர், ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் என பலரும் பாராட்டியுள்ளனர்.

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் பி.வி.சிந்து. இந்நிலையில் இன்று பி.வி.சிந்து நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய பி.வி.சிந்து, “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். என்னை ஆதரித்து ஊக்குவித்த பேட்மிண்டன் சங்கம் உட்பட அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இது மகிழ்ச்சியான தருணம்” எனத் தெரிவித்தார்.