அலைச்சறுக்கு விளையாட்டின்போது ஏற்பட்ட விபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் படுகாயமடைந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவர் தனது மகனுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் கடலில் அலைச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டு விபரீதமாகி விட்டது. அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் ஹைடன் பலத்த காயமடைந்தார். இதில் அவருக்கு முதுகு, நெற்றி, கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவும் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ள அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சமூகவலைத்தளத் தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவர் விரைவில் குணம்பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.