தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் அபார சதம் அடித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதற்கான டெஸ்ட் அணியில் தமிழகத்தை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் இடம்பிடித்திருந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர், சரியாக விளை யாட வில்லை. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்த அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார். இதையடுத்து மற்ற போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந் நிலையில் இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியில் விளையாட ஒப்பந்தம் ஆனார். இப்போது நடந்து வரும் கவுண்டி சாம்பியன்ஸ் போட்டியில் இந்த அணி பங்கேற்கிறது. எஸ்ஸெக்ஸ் அணியும் நாட்டிங்கம்ஷைர் அணியும் மோதும் போட்டி நான்கு நாள் டெஸ்ட் போட்டி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இதில் முரளி விஜய் பங்கேற்றார். முதலில் ஆடிய நாட்டிங்கம்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
Read Also -> ஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!
இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முரளி விஜய், 95 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நாட்டிங்கம்ஷைர் அணி, 337 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக பிராத்வொ யிட் 68 ரன்கள் சேர்த்தார். எஸ்ஸெக்ஸ் அணியின் சைமன் ஹார்மர் அப்பாரமாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தனது இரண்டாவ து இன்னிங்ஸை தொடங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, முரளி விஜய், வெஸ்லி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டு விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முரளி விஜய் 100 ரன்னும் வெஸ்லி 110 ரன்னும் எடுத்தனர்.