விளையாட்டு

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லோகோ அறிமுகம்

JustinDurai

ஐபிஎல் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லோகோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னோ அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அணியின் லோகோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் லோகோக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

பண்டைய இந்தியத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒவ்வொரு இந்தியனுக்கானது; இந்த அணி, நாட்டை ஒன்றிணைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2சதவீதமாக இருக்கும் - பொருளாதார ஆய்வறிக்கை சொல்வதென்ன?