விளையாட்டு

பீட்டர்ஸ்பர்க் ஓபன்: பயஸ்-புரவ் இணை அரையிறுதிக்கு தேர்வு

webteam

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - புரவ் ராஜா இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காலிறுதியில் பிரேசிலின் மார்செலோ டிமோலினர் - நியூசிலாந்தின் மார்கஸ் டேனியல் இணையை எதிர்த்து, இந்தியாவின் பயஸ்-புரவ் இணை விளையாடியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லியாண்டர் பயஸ் - புரவ் ராஜா இணை, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிப் போட்டிக்கு பயஸ்-புரவ் இணை முன்னேறியுள்ளது.