ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நடப்புத் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பார்த்தீவ் படேல் 25 ரன்களும், லெண்டில் சிம்மன்ஸ் 66 ரன்களும் குவித்தனர். பொல்லார்ட் 63 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி குறுகிய இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 14-வது ஓவரிலேயே 66 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை மும்பை அணி படைத்தது. அதேபோல், ஒரு அணி ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அணி என்ற வேதனையை டெல்லி அணி நிகழ்த்தியுள்ளது